செய்தியின் பின்னணியில்

Associated Press
[Mon Nov 5, 2:40 PM ET]
Sri Lanka rebel arms-buying goes global
MATTHEW ROSENBERG, Associated Press Writer

Mon Nov 5, 2:40 PM ET நேரத்திலே Yahoo! News இலே ஏற்றப்பட்டிருக்கும் Associated Press இன் புலனாய்வுச்செய்திக்கட்டுரை, "Sri Lanka rebel arms-buying goes global." இதனை MATTHEW ROSENBERG, Associated Press Writer, Associated Press reporter Tom Hays in New York and Kwang-tae Kim in Seoul, South Korea உதவியுடன் எழுதியிருக்கின்றார். இச்செய்தி http://news.yahoo.com/s/ap/20071105/ap_on_re_as/sri_lanka_tiger_inc__abridged என்ற முகவரியிலே கிடைக்கின்றது. மேலும், MSNBC உட்பட பல செய்தித்தாபனங்கள் இப்புலனாய்வுச்செய்திக்கட்டுரையை வெளியிட்டிருக்கின்றன.

இச்செய்தியின் புலனாய்வுக்குத் தகவல் தந்தவர்களாகக் குறிப்பிடப்பட்டிருப்பவர்கள், அவுஸ்ரேலியாவைச் சேர்ந்தவரும் தற்போது அமெரிக்க வலதுசாரி சிந்தனைக்குளமான RAND இலே பணியாற்றுகின்றவருமான Peter Chalk1, அவுஸ்ரேலிய Macquarie University இன் Centre for Policing, Intelligence & Counter Terrorism துறையின் ஆய்வுமாணவரான Shanaka Jayasekara.

இப்புலனாய்வுச்செய்திக்கட்டுரை ஸ்ரீலங்கா அரசுசார்ந்த பக்கத்துப்பார்வையினைத் தருவதற்கு, கட்டுரையாசிரியரின் விமர்சனமற்ற தகவற்றொகுப்புத்தன்மையும் ஒரு காரணமானாலும், முக்கிய காரணமாவது, மேற்கூறிய இருவர்களும் பயங்கரவாத(ம் தொடர்பான) நிபுணர்களாக நிறுத்தப்பட்டிருப்பதுமாகும்.

~~~

கட்டுரையிலிருந்து:
"No one is paying a bloody bit of attention to any other group" apart from al-Qaida, especially one like the Tigers, whose fight is in a relatively poor country, said Chalk. These often ignored groups "pose real threats."
பீட்டர் ஸால்க் கடந்த ஒரு தசாப்தமாக விடுதலைப்புலிகள் தொடர்பான பயங்கரப்பார்வையை மிகவும் முன் வைக்கின்றவராவார். [உதாரணம், 1999 மே 13 இலே அவர் அவுஸ்ரேலிய ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்துக்கு (ABC) கொடுத்த செவ்வியொன்று]. இணையத்திலே கிட்டும் அவரது ஒரு கட்டுரை, LTTE’s international organisation and operations– a preliminary analysis விரிவானபோதிலுங்கூட, Rohan Gunaratne போன்ற சார்புநிலைப்பாடு கேள்விக்குரிய ஆய்வாளர்களையும் மிதமிஞ்சிய எண்ணிகையிலான ஸ்ரீலங்கா அரசுசார்பானவர்களுடனான தனிப்பட்ட உரையாடல்களையும் ஸ்ரீலங்காவின் வெளிப்படையான சிங்களத்தேசியத்தினை முன்னிறுத்தும் The Island போன்ற ஊடகங்களையும் ஆதாரங்களாகக் கொண்ட கட்டுரையாகும். இத்தகு ஆதாரங்களுக்கு மறுப்பளிக்கவோ, கேள்விக்குள்ளாக்கிச் சீர்தூக்கி கட்டுரையைக் கட்டியமைக்கவோ அவர் முயலவில்லை. இஃது அவரது ஆய்வினது தரத்தினையும் நிபுணத்துவத்தினையும் கேள்விக்குறியாக்கிறது.

மேலும், அவுஸ்ரேலியாவின் Society for Peace, Unity and Human Rights for Sri Lanka Inc. (SPUR) என்ற அமைப்பு அடிப்படையிலே அதிவலதுசாரி சிங்களத்தேசியத்தினை மிகவும் வெளிப்படையாக முன்வைக்கும் அமைப்பு. பீட்டர் ஸால்க் இவ்வமைப்பு 21 மார்ச் 2001 அன்று நிகழ்ந்த Conference on Tamil Tiger Terrorism and the threats to security in the Asia Pacific Region இலே அதிதிப்பேச்சாளராக அழைக்கப்பட்டு உரை நிகழ்ந்திருப்பவரும் தொடர்ச்சியாக இவ்வமைப்பினாலும் இவற்றோடு ஒத்த கருத்துள்ள அமைப்புகளாலும் ஸ்ரீலங்கா அரச ஊடகங்களாலும் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகின்றவருமாவார். ஈழத்தமிழ் அமைப்புகள் தொடர்பாக பத்தாண்டுகளாக அதிகளவு கட்டுரைகளை வெளியிட்டுக் கிட்டும் இவரது ஸ்ரீலங்கா அரசின் ஆயுதக்கொள்வனவு, செயற்பாடுகள் குறித்த கட்டுரைகள் இணையத்திலே எங்குமே தேடலிலே அகப்படவில்லை. இப்படியாக ஒரு பக்கச்சார்புள்ள அதிதிப்பேச்சாளராகக் கலந்துகொண்டு ஒருவரின் நிபுணத்துவம் மட்டும் கேள்விக்குரியதல்ல, நடுநிலையும் கேள்விக்குரியதாகவேயிருக்கின்றது.

பெரிதாக்கிப் பார்க்கப் படத்தினைச் சொடுக்கவும்.
~~~

கட்டுரையிலிருந்து:
"After 9/11, the know-your-client principle was supposed to be integrated into the financial markets and into pretty much every business," said Shanaka Jayasekra, a terrorism expert at Macquarie University in Sydney, Australia. The Tigers are "showing what can be done to exploit the holes in this system."

இரண்டாவது நிபுணராகக் குறிக்கப்படும் சானக ஜயசேகர, தற்போது பயங்கரவாதம் தொடர்பான ஆய்வாளராகக் (கலாநிதிப்பட்ட ஆய்வு மாணவர்) கட்டுரையிலே காட்டப்படுகின்றார். ஆனால், அவரது பின்புலத்தினை ஆயும்போது, அவர் ரோகான் குணரட்னா கற்ற ஸ்கொட்லாந்து அன்ரூஸ் பல்கலைக்கழகத்திலே பயங்கரவாத முதுமாணிப்பட்டம் பெற்றதோடு ஏழாண்டுகாலம் (2002-2006) ஸ்ரீலங்கா அரசின் சமாதானப்பேச்சுவார்த்தைக்கான மையத்தின் கொள்கை இயக்குநராக, ஆலோசகராகச் செயற்பட்டவராகவும் தற்போதும் ஸ்ரீலங்காவின் The Lakshman Kadirgamar Institute of International Relations and Strategic Studies உடன் இணைந்தவராகவும் காணப்படுகிறார். இப்படியாக, ஸ்ரீலங்கா அரசின் கொள்கை அமைப்புப்பேச்சாளர் ஒருவர் பயங்கரவாத(ம் தொடர்பான) நிபுணர் என்ற அளவிலே கட்டுரையிலே கருத்தினைத் தெரிவிக்கின்றார்.

பெரிதாக்கிப் பார்க்கப் படத்தினைச் சொடுக்கவும்.

மத்யூ உரோஸன்பேர்க்கின் இந்த "Sri Lanka rebel arms-buying goes global" கட்டுரை கட்டுரையாளரின் ஆய்வு ஏதுமின்றி பத்திரிகையாளர்கள் இருவரின் குறிப்புகளைத் தொகுத்து மேற்கூறிய இரு நிபுணர்களை மேற்கோள் காட்டி வந்திருக்கின்றது. கட்டுரையாளரின் விமர்சனமற்ற தொகுப்பு ஒரு முக்கிய தவறென்றால், அதைவிட முக்கியமான தவறு மேற்கூறிய இரு நிபுணர்களும் அவர்களின் பின்புலங்களும் சார்புநிலைகளும் வெளிப்படையாகச் சொல்லப்படாது கருத்துகளைத் தர அனுமதித்திருப்பது. அவர்களின் கல்வி, அனுபவம் அடிப்படையிலே கருத்தினைச் சொல்ல அவர்களுக்குத் தகுதி இருக்கக்கூடும்; [பீற்றர் ஸால்கின் பயங்கரவாதிகள் தொடர்பான வகைப்படுத்தும் கருத்தோடு அமெரிக்க ஜனநாயகக்கட்சிசார்பாக அதிபர் தேர்தலுக்குப் போட்டியிட முனையும் ஹிலரி கிளிங்டனின் கருத்து முரண்படுவதைக்கூட கட்டுரையாளர் சுட்டியிருந்திருக்கலாம்.] ஆனால், அவர்களின் சார்புநிலை, விமர்சனமற்ற வெறும் கருத்துத்தொகுப்பான இக்கட்டுரையிலிருந்து தகவலைப் பெறும் வாசகர்களுக்குத் தவறான புரிதலைத் தருவதாகும். இது தொகுப்பாளரான மத்யூ உரோசன்பேர்க்கின் பக்கத்திலே திட்டமிட்டு நடந்திருக்க வாய்ப்பில்லை என்று கொள்ளினுங்கூட, அவரைப் போன்ற ஊடகவியலாளர்கள் தமக்கான நிபுணர்களைக் கருத்துக்கூறத் தேர்ந்தெடுக்கும்போது, அவர்களின் பின்புலன்களை ஆய்வதும் இயன்றவரை சார்புள்ளவர்களைத் தவிர்ப்பவதும் இயலாதவிடத்து அவர்களின் பின்புலங்களைக் கட்டுரையிலே குறிப்பதும் அவசியமாகும்.

அஸோசியேட் பிரஸின் செய்திகளும் அலசல்களும் பல ஊடகநிறுவனங்களுக்கு விற்கப்படுவன. இவற்றிலே எல்லாமே (யாஹூ செய்திகள், எம்எஸ்என்பிசி உட்பட) இப்பின்புலங்களை அறிய நேரும் ஒருவர் தனது அறிதலை வெளிக்காட்டி இப்படியான கட்டுரைகளின் தரக்கேடுகளையும் பக்கச்சார்புகளையும் வெளியிடும் வசதிகளைக் கொண்டிருப்பதில்லை. மத்யூ உரொஸன்பேர்க் இவற்றினைச் சுட்டிக்காட்ட அவரது மின்னஞ்சலையேனும் தருவது வசதியாகவிருக்கும். ஆனால், அதுகூட இணையத்திலே வெளிப்படையாக அறியத்தரப்படவில்லை. அவருடைய மின்னஞ்சல் முகவரியை அறியத் தருகின்றவர்களுக்கு அல்லது அவருக்கு இக்கட்டுரையின் குறைகளைக் குறித்து அறியத்தருகின்றவர்களுக்கு நன்றி.

பிற்குறிப்பு: 1 Peter Chalk இனை சுவீடன் உப்சலா பல்கலைக்கழக மதங்களின் வரலாறுத்துறைப்பேராசிரிய Peter Schalk உடன் குழப்பிக்கொள்ளக்கூடாது.

6 comments:

Anonymous said...

Try Associated Press at
info@ap.org

Associted Press Contact

said...

காலையில் சுட்டி வந்திருந்தது. விரிவான அலசலுக்கும் பின்னணி தகவல்களுக்கும் நன்றிகள்

Anonymous said...

A related analysis

TamilCanadian
Prostitution is an Institution
Aaron Rajah, San Diego, California
http://www.tamilcanadian.com/page.php?cat=134&id=5261

Anonymous said...

good

Anonymous said...

See how this news item has been twisted to its worst by Dinamalar, the Fiction Manufacturing Mill in India

சர்வதேச அளவில் புலிகளின் ஆயுதக்கடத்தல் 'நெட்வேர்க்'

Dinamalar does not even have the grace to quote the original source, Maththew Rosenberg's original AP write up. Cheap cheating bastrads. Third rate rogue, alleaged woman abuser Ramesh can not be expected to publish better

Anonymous said...

http://www.tamilcanadian.com/page.php?cat=134&id=5283

Prostitutes Busted: Press Release

November 20th, 2007.