சொல்லாதன சொல்வோம்

12, நவம்பர் 2007 திங்கள் அன்று சென்னையிலே விடுதலைப்புலிகளின் மறைந்த அரசியற்பிரிவுத்தலைவர் தமிழ்ச்செல்வனின் கொலையைக் கண்டிக்குமுகமாக வைகோ, பழ. நெடுமாறன் ஆகியோர் பேரணி நடத்த முற்பட்டபோது, கைது செய்யப்பட்டனர்.

இதன் பின்னால், சென்னையிலிருந்து வரும் இந்து பத்திரிகை ஒரு செய்தியை வெளியிட்டிருக்கின்றது.

The HinduTop Stories
'No comment' on arrest of Vaiko, Nedumaran: LTTE
[Tuesday, November 13, 2007 : 1805 Hrs]

இச்செய்தியிலே குறிப்பிடப்பட்டிருப்பவை

LTTE on Tuesday refrained from making any comment on the arrest of MDMK chief Vaiko and Tamil Nationalist Movement leader P Nedumaran, who were taken into custody in Tamil Nadu for defying a ban on a rally to condole the death of the Tigers' political head S P Thamilselvan.


என்பதும்

"LTTE does not immediately want to make any comment on the arrest," sources close to the outfit said.


என்பதுமாகும்.

தமிழகத்திலே மட்டுமல்ல, இந்தியா, உலகநாடுகள் எங்கெனினும் தமக்கு ஆதரவாகவோ எதிராகவோ நடத்தப்படும் பேரணிகள் குறித்து விடுதலைப்புலிகள் இதுவரை காலமும் உடன் கருத்து வெளியிட்டதாக, ராம்வோச்சர் தேடியவரையிலும் காணமுடியவில்லை. இந்து பத்திரிகைகூட, அப்படியான சந்தர்ப்பங்களிலே விடுதலைப்புலிகளிடம் கருத்தினைக் கேட்டது பற்றியும் காணமுடியவில்லை.

அந்நிலையிலே, மேற்படியான இந்துவின் செய்தி இந்துவின் பத்திரிகைத்தனத்திலே ஒரு புதிய உத்தியாக, "வைகோ, பழ நெடுமாறன் கைது பற்றி விடுதலைப்புலிகளுக்குக் கருத்தோ, அக்கறையோ இல்லை" என்ற அர்த்தம் வெளிப்படும் வகையிலே வெளியாகியிருக்கின்றது.

தலைப்பிலே "'No comment' on arrest of Vaiko, Nedumaran: LTTE" என்று சொல்லியிருக்கும் இந்து, உள்ளடக்கச்செய்தியின் ஆரம்பத்திலே, "LTTE on Tuesday refrained from making any comment on the arrest of MDMK chief Vaiko and Tamil Nationalist Movement leader P Nedumaran" என்பதாகத் திரித்து, இறுதியிலே ""LTTE does not immediately want to make any comment on the arrest," sources close to the outfit said" என்பதாக மாற்றிவிடுகின்றது. இந்து, புரொண்ட்லைன் வெளியீடுகளைத் தொடர்ந்து வாசித்துவருகின்றவர்களுக்கு, இவை ஸ்ரீலங்கா, ஈழம், ஸ்ரீர்லங்கா அரசு, விடுதலைப்புலிகள் குறித்த (தமது) கருத்துகளை எப்போதும் "sources close to the XXXX" என்பதாகவோ "sources not want to be identified" போன்ற வகையிலோ வெளியிட்டுவருவது தெரிந்திருக்கும். பத்திரிகைத்துறையிலே இப்படியான தமக்குத் தகவல் தருகின்றவர்களின் அடையாளங்களைக் காப்பதற்காக, இப்படியான தொடர்களைப் பத்திரிகையாளர்கள் பயன்படுத்துவது வழக்கமே. ஆனால், ஸ்ரீலங்கா-ஈழம் தொடர்பாக, இந்து குழுமவெளியீடுகளிலே இந்நிலை அவ்வூடகத்தின் இலங்கை அரசியல் குறித்த நிலைப்பாடுகளை வெளியிடும், வாசகர்களுக்கு சில கருத்துகளையும் தோற்றங்களையும் புகுத்தும் உத்தியாகவே பயன்படுகின்றதென்பது மிகவும் வெளிப்படை.

இப்படியாக, இந்து, "வைகோ, நெடுமாறன் கைது குறித்து விடுதலைப்புலிகள் கருத்து ஏதுமில்லை" என்று சொன்னதாகச் சொல்லும் இச்செய்தி, ஸ்ரீலங்கா அரசுசார்பான செய்தியூடகங்களிலோ, ஸ்ரீலங்கா அரசுவலைத்தளங்களிலோ, இன்னமும் செய்திகளை தாம் பெற்றுக்கொண்ட ஊடக ஆதாரமின்றி உருவாக்கும் தினமலர் போன்ற பத்திரிகைநெறியினை முற்றிலுமே கைக்கொள்ளாத தமிழ்ச்செய்தியூடகங்களிலோ இவ்வாரத்திலே மேலும் திரிக்கப்பட்டும் இந்துவின் பத்திரிகைநெறியினை முன்வைத்துப் பதிப்பிக்கப்பட்டும் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏற்கனவே ஸ்ரீலங்கா அரசு வெளியிடும் செய்திகளை இந்து, இந்துஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் ஒப் இந்தியா, இந்தியன் எக்ஸ்ப்ரஸ் போன்றவை செய்திகளாகத் தருவதையும் அச்செய்திகளையே மீண்டும் இப்பத்திரிகைகள் சொல்லும் செய்திகளாக ஸ்ரீலங்கா அரசின் செய்தித்தளங்களும் செய்தித்தாபனங்களும் வெளியிடுவதை நாம் கண்டிருக்கின்றோம். சுட்டியும் காட்டியிருக்கின்றோம். இந்தச்செய்தியும் இப்படியாக செய்திச்சுழற்சிக்கு உட்படுத்தப்படுமா என்பதை நாம் காத்திருந்தே காணவேண்டும்.

The Age-Australia இன் தலைப்பு

Insensitiveness in Reporting by The Age with a title, "Barber who became Tamil Tiger negotiator"
http://ramwatch.blogspot.com/2007/11/insensitiveness-in-reporting.html

செய்தியின் பின்னணியில்

Associated Press
[Mon Nov 5, 2:40 PM ET]
Sri Lanka rebel arms-buying goes global
MATTHEW ROSENBERG, Associated Press Writer

Mon Nov 5, 2:40 PM ET நேரத்திலே Yahoo! News இலே ஏற்றப்பட்டிருக்கும் Associated Press இன் புலனாய்வுச்செய்திக்கட்டுரை, "Sri Lanka rebel arms-buying goes global." இதனை MATTHEW ROSENBERG, Associated Press Writer, Associated Press reporter Tom Hays in New York and Kwang-tae Kim in Seoul, South Korea உதவியுடன் எழுதியிருக்கின்றார். இச்செய்தி http://news.yahoo.com/s/ap/20071105/ap_on_re_as/sri_lanka_tiger_inc__abridged என்ற முகவரியிலே கிடைக்கின்றது. மேலும், MSNBC உட்பட பல செய்தித்தாபனங்கள் இப்புலனாய்வுச்செய்திக்கட்டுரையை வெளியிட்டிருக்கின்றன.

இச்செய்தியின் புலனாய்வுக்குத் தகவல் தந்தவர்களாகக் குறிப்பிடப்பட்டிருப்பவர்கள், அவுஸ்ரேலியாவைச் சேர்ந்தவரும் தற்போது அமெரிக்க வலதுசாரி சிந்தனைக்குளமான RAND இலே பணியாற்றுகின்றவருமான Peter Chalk1, அவுஸ்ரேலிய Macquarie University இன் Centre for Policing, Intelligence & Counter Terrorism துறையின் ஆய்வுமாணவரான Shanaka Jayasekara.

இப்புலனாய்வுச்செய்திக்கட்டுரை ஸ்ரீலங்கா அரசுசார்ந்த பக்கத்துப்பார்வையினைத் தருவதற்கு, கட்டுரையாசிரியரின் விமர்சனமற்ற தகவற்றொகுப்புத்தன்மையும் ஒரு காரணமானாலும், முக்கிய காரணமாவது, மேற்கூறிய இருவர்களும் பயங்கரவாத(ம் தொடர்பான) நிபுணர்களாக நிறுத்தப்பட்டிருப்பதுமாகும்.

~~~

கட்டுரையிலிருந்து:
"No one is paying a bloody bit of attention to any other group" apart from al-Qaida, especially one like the Tigers, whose fight is in a relatively poor country, said Chalk. These often ignored groups "pose real threats."
பீட்டர் ஸால்க் கடந்த ஒரு தசாப்தமாக விடுதலைப்புலிகள் தொடர்பான பயங்கரப்பார்வையை மிகவும் முன் வைக்கின்றவராவார். [உதாரணம், 1999 மே 13 இலே அவர் அவுஸ்ரேலிய ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்துக்கு (ABC) கொடுத்த செவ்வியொன்று]. இணையத்திலே கிட்டும் அவரது ஒரு கட்டுரை, LTTE’s international organisation and operations– a preliminary analysis விரிவானபோதிலுங்கூட, Rohan Gunaratne போன்ற சார்புநிலைப்பாடு கேள்விக்குரிய ஆய்வாளர்களையும் மிதமிஞ்சிய எண்ணிகையிலான ஸ்ரீலங்கா அரசுசார்பானவர்களுடனான தனிப்பட்ட உரையாடல்களையும் ஸ்ரீலங்காவின் வெளிப்படையான சிங்களத்தேசியத்தினை முன்னிறுத்தும் The Island போன்ற ஊடகங்களையும் ஆதாரங்களாகக் கொண்ட கட்டுரையாகும். இத்தகு ஆதாரங்களுக்கு மறுப்பளிக்கவோ, கேள்விக்குள்ளாக்கிச் சீர்தூக்கி கட்டுரையைக் கட்டியமைக்கவோ அவர் முயலவில்லை. இஃது அவரது ஆய்வினது தரத்தினையும் நிபுணத்துவத்தினையும் கேள்விக்குறியாக்கிறது.

மேலும், அவுஸ்ரேலியாவின் Society for Peace, Unity and Human Rights for Sri Lanka Inc. (SPUR) என்ற அமைப்பு அடிப்படையிலே அதிவலதுசாரி சிங்களத்தேசியத்தினை மிகவும் வெளிப்படையாக முன்வைக்கும் அமைப்பு. பீட்டர் ஸால்க் இவ்வமைப்பு 21 மார்ச் 2001 அன்று நிகழ்ந்த Conference on Tamil Tiger Terrorism and the threats to security in the Asia Pacific Region இலே அதிதிப்பேச்சாளராக அழைக்கப்பட்டு உரை நிகழ்ந்திருப்பவரும் தொடர்ச்சியாக இவ்வமைப்பினாலும் இவற்றோடு ஒத்த கருத்துள்ள அமைப்புகளாலும் ஸ்ரீலங்கா அரச ஊடகங்களாலும் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகின்றவருமாவார். ஈழத்தமிழ் அமைப்புகள் தொடர்பாக பத்தாண்டுகளாக அதிகளவு கட்டுரைகளை வெளியிட்டுக் கிட்டும் இவரது ஸ்ரீலங்கா அரசின் ஆயுதக்கொள்வனவு, செயற்பாடுகள் குறித்த கட்டுரைகள் இணையத்திலே எங்குமே தேடலிலே அகப்படவில்லை. இப்படியாக ஒரு பக்கச்சார்புள்ள அதிதிப்பேச்சாளராகக் கலந்துகொண்டு ஒருவரின் நிபுணத்துவம் மட்டும் கேள்விக்குரியதல்ல, நடுநிலையும் கேள்விக்குரியதாகவேயிருக்கின்றது.

பெரிதாக்கிப் பார்க்கப் படத்தினைச் சொடுக்கவும்.
~~~

கட்டுரையிலிருந்து:
"After 9/11, the know-your-client principle was supposed to be integrated into the financial markets and into pretty much every business," said Shanaka Jayasekra, a terrorism expert at Macquarie University in Sydney, Australia. The Tigers are "showing what can be done to exploit the holes in this system."

இரண்டாவது நிபுணராகக் குறிக்கப்படும் சானக ஜயசேகர, தற்போது பயங்கரவாதம் தொடர்பான ஆய்வாளராகக் (கலாநிதிப்பட்ட ஆய்வு மாணவர்) கட்டுரையிலே காட்டப்படுகின்றார். ஆனால், அவரது பின்புலத்தினை ஆயும்போது, அவர் ரோகான் குணரட்னா கற்ற ஸ்கொட்லாந்து அன்ரூஸ் பல்கலைக்கழகத்திலே பயங்கரவாத முதுமாணிப்பட்டம் பெற்றதோடு ஏழாண்டுகாலம் (2002-2006) ஸ்ரீலங்கா அரசின் சமாதானப்பேச்சுவார்த்தைக்கான மையத்தின் கொள்கை இயக்குநராக, ஆலோசகராகச் செயற்பட்டவராகவும் தற்போதும் ஸ்ரீலங்காவின் The Lakshman Kadirgamar Institute of International Relations and Strategic Studies உடன் இணைந்தவராகவும் காணப்படுகிறார். இப்படியாக, ஸ்ரீலங்கா அரசின் கொள்கை அமைப்புப்பேச்சாளர் ஒருவர் பயங்கரவாத(ம் தொடர்பான) நிபுணர் என்ற அளவிலே கட்டுரையிலே கருத்தினைத் தெரிவிக்கின்றார்.

பெரிதாக்கிப் பார்க்கப் படத்தினைச் சொடுக்கவும்.

மத்யூ உரோஸன்பேர்க்கின் இந்த "Sri Lanka rebel arms-buying goes global" கட்டுரை கட்டுரையாளரின் ஆய்வு ஏதுமின்றி பத்திரிகையாளர்கள் இருவரின் குறிப்புகளைத் தொகுத்து மேற்கூறிய இரு நிபுணர்களை மேற்கோள் காட்டி வந்திருக்கின்றது. கட்டுரையாளரின் விமர்சனமற்ற தொகுப்பு ஒரு முக்கிய தவறென்றால், அதைவிட முக்கியமான தவறு மேற்கூறிய இரு நிபுணர்களும் அவர்களின் பின்புலங்களும் சார்புநிலைகளும் வெளிப்படையாகச் சொல்லப்படாது கருத்துகளைத் தர அனுமதித்திருப்பது. அவர்களின் கல்வி, அனுபவம் அடிப்படையிலே கருத்தினைச் சொல்ல அவர்களுக்குத் தகுதி இருக்கக்கூடும்; [பீற்றர் ஸால்கின் பயங்கரவாதிகள் தொடர்பான வகைப்படுத்தும் கருத்தோடு அமெரிக்க ஜனநாயகக்கட்சிசார்பாக அதிபர் தேர்தலுக்குப் போட்டியிட முனையும் ஹிலரி கிளிங்டனின் கருத்து முரண்படுவதைக்கூட கட்டுரையாளர் சுட்டியிருந்திருக்கலாம்.] ஆனால், அவர்களின் சார்புநிலை, விமர்சனமற்ற வெறும் கருத்துத்தொகுப்பான இக்கட்டுரையிலிருந்து தகவலைப் பெறும் வாசகர்களுக்குத் தவறான புரிதலைத் தருவதாகும். இது தொகுப்பாளரான மத்யூ உரோசன்பேர்க்கின் பக்கத்திலே திட்டமிட்டு நடந்திருக்க வாய்ப்பில்லை என்று கொள்ளினுங்கூட, அவரைப் போன்ற ஊடகவியலாளர்கள் தமக்கான நிபுணர்களைக் கருத்துக்கூறத் தேர்ந்தெடுக்கும்போது, அவர்களின் பின்புலன்களை ஆய்வதும் இயன்றவரை சார்புள்ளவர்களைத் தவிர்ப்பவதும் இயலாதவிடத்து அவர்களின் பின்புலங்களைக் கட்டுரையிலே குறிப்பதும் அவசியமாகும்.

அஸோசியேட் பிரஸின் செய்திகளும் அலசல்களும் பல ஊடகநிறுவனங்களுக்கு விற்கப்படுவன. இவற்றிலே எல்லாமே (யாஹூ செய்திகள், எம்எஸ்என்பிசி உட்பட) இப்பின்புலங்களை அறிய நேரும் ஒருவர் தனது அறிதலை வெளிக்காட்டி இப்படியான கட்டுரைகளின் தரக்கேடுகளையும் பக்கச்சார்புகளையும் வெளியிடும் வசதிகளைக் கொண்டிருப்பதில்லை. மத்யூ உரொஸன்பேர்க் இவற்றினைச் சுட்டிக்காட்ட அவரது மின்னஞ்சலையேனும் தருவது வசதியாகவிருக்கும். ஆனால், அதுகூட இணையத்திலே வெளிப்படையாக அறியத்தரப்படவில்லை. அவருடைய மின்னஞ்சல் முகவரியை அறியத் தருகின்றவர்களுக்கு அல்லது அவருக்கு இக்கட்டுரையின் குறைகளைக் குறித்து அறியத்தருகின்றவர்களுக்கு நன்றி.

பிற்குறிப்பு: 1 Peter Chalk இனை சுவீடன் உப்சலா பல்கலைக்கழக மதங்களின் வரலாறுத்துறைப்பேராசிரிய Peter Schalk உடன் குழப்பிக்கொள்ளக்கூடாது.

மீண்டும் செய்திகளிலே கருணா அம்மான்

ஐக்கிய இராச்சியத்திலே கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் கடவுச்சீட்டு ஏமாற்று என்ற வகையின்கீழே கைது செய்யப்பட்டார். அதன் பின், அண்மைக்காலமாக தமிழீழமக்கள்விடுதலைப்புலிகள் (TMVP) என்றும் தமிழீழவிடுதலைப்புலிகளுக்கு (LTTE) மாற்றான ஐனநாயக இயக்கம் என்றும் செய்திகளிலே குறிக்கப்பட்டு வந்தவர் விடுதலைப்புலிகளின் கருணா அம்மான், பிரிந்த விடுதலைப்புலி கருணா அம்மான் என்று செய்திகளிலே குறிக்கப்படுகின்றார். விடுதலைப்புலிகளின் அரசியற்பிரிவினைச் சேர்ந்த தமிழ்ச்செல்வனின் மரணம் உலகச்செய்திகளிலே பேசப்படும்போது, குற்றம் சாட்டப்பட்டிருக்கும் கருணா அம்மானை மீண்டும் விடுதலைப்புலி என்று குறிப்பிடத் தொடங்கியிருப்பது எதேச்சையானதல்ல.

சில உதாரண செய்தித்தலைப்புகள்:

The Hindu
[Sunday, Nov 04, 2007]
Karuna in immigration detention centre
Hasan Suroor
LONDON: The rebel LTTE leader, Vinayagamoorthi Muralitharan, better known as “Colonel Karuna Amman,” who was arrested here on Friday for allegedly travelling on a false passport, is being held in an immigration detention centre.

(எவ்விடத்திலும் TMVP என்ற அமைப்பினைப் பற்றி குறிப்பிடப்படவேயில்லை. தொடரும் செய்தியிலே கருணாவின் மீது HumanRightsWatch முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளை மறைமுகமாக மறுக்கும் செயற்பாடும் நிகழ்கிறது)

-------

The Press Association
Tamil Tigers rebel leader arrested
A prominent Sri Lankan rebel leader has been arrested in a joint operation by British police and immigration officials, the Home Office said.

Colonel Karuna Amman, also known as Vinayagamoorthi Muralitharan, who leads a faction of the Tamil Tiger rebels, is now in immigration detention.

--------

இந்துவின் இரண்டு செய்திகள்

இந்து பத்திரிகையிலே தோன்றியிருக்கும் செய்திகளும் அதற்கு முரணாக மற்றைய செய்தித்தாபனங்கள் தந்திருக்கும் செய்திகளும் கீழே தரப்பட்டுள்ளன


The Hindu
[Monday, Nov 05, 2007]
LTTE chief declares renewed resolve to continue “struggle”
B. Muralidhar Reddy

.......
Separately, the military claimed that six civilians were reported injured in an LTTE hand grenade attack at Navaladi in Valachchenai in the east on Sunday afternoon. It said an LTTE operative hurled a hand grenade at a vehicle passing along the A-15 main road, Navaladi.
.....

VS.

TamilNet
[Sunday, 04 November 2007, 14:51 GMT]
Key paramilitary operative wounded in Claymore attack

Seven paramilitary personnel with a key TMVP paramilitary operative, Sinnaththamby, were wounded when they were ambushed while riding in a white van at Naavaladi in Oaddamaavadi police division Sunday around 2:30 p.m.
....

UPDATE: (04, Nov 2007 07:30 PST)
Sri Lankan Ministry of Defence
[11/5/2007 7:58:12 AM ]
LTTE targets Tamil Political group members, 1 killed & 06 injured - Batticaloa [Updated]
One TMVP group member was killed injuring six others when their vehicle plying from Valachchenai to Polonnaruwa came under an LTTE hand grenade attack yesterday (04), at 2:45 p.m.

======================================

The Hindu
[Monday, Nov 05, 2007]
LTTE chief declares renewed resolve to continue “struggle”
B. Muralidhar Reddy

.....
In another incident, the military said five bullet-riddled bodies of Tamil civilians were found in the Thavasikulama area in Vavuniya in the north on Sunday morning. A report on the Defence Ministry web site, quoting unnamed civilians, said, “They further told that the crime might have committed by the LTTE since there are small groups of LTTE cadres operating in the area.

VS.

பிபிசி தமிழோசை
[ஞாயிறு, நவம்பர் 05, 2007]
வவுனியாவில் ஐவர் சுட்டுக்கொலை

இலங்கையின் வடக்கே வவுனியா தவசிகுளத்தில் விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் ஆயுதம் தாங்கிய ஐந்து இளைஞர்களை சனிக்கிழமை இரவு சுட்டுக் கொன்றுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தவசிகுளம் ஞான வைரவர் கோவிலுக்கு அருகில் 5 இளைஞர்களின் சடலங்கள் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் ஞாயிற்றுகிழமை காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். இவர்களில் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒருவர் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா வேப்பங்குளத்திலிருந்து சனிக்கிழமை காலை வேலைக்குச் செல்வதாகக் கூறி புறப்பட்டுச் சென்ற இளைஞர்களான தமது பிள்ளைகள் 4 பேர் காணாமல் போனதாகவும், சனிக்கிழமையன்று அவர்களே தவசிகுளத்தில் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், இறந்தவர்களின் உறவினர்கள் மரண விசாரணையின்போது வவுனியா மாவட்ட நீதிபதியிடம் கூறியுள்ளனர்.

வவுனியா வேப்பங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த படையினரே தங்களது பிள்ளைகளைக் கூட்டிச்சென்றதாக நேரில் கண்டவர்கள் தங்களிடம் கூறியதையடுத்து, இராணுவத்தினரிடம் இது குறித்து கேட்டபோது அவ்வாறு தாங்கள் எவரையும் கைது செய்யவில்லை எனவும் தெரிவித்தாகவும் இறந்தவர்களின் உறவினர்கள் மரண விசாரணையின்போது வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியனிடம் தெரிவித்துள்ளனர்.


AND

BBC-Sandeshaya (Sinhala Service)
[04 November, 2007 - 17:51 GMT]
SLA accused of killing civilians

The judiciary in the northern Sri Lanka has ordered a senior Sri Lanka Army (SLA) officer to appear before the courts as five bodies of civilians found in Vavuniya.

Vavuniya district Judge ordered the police to record a statement from the officer in charge of Vessankulama SLA camp and produce him before the courts on Monday.

Five unidentified bodies were found shot dead near the camp on Sunday morning.

Four of the bodies were later identified by the relatives at the inquest.

Gunshots heard

They disappeared after leaving for work two days ago, relatives told the magistrate inquest.

Relatives were told by the officials at the SLA camp that they had no knowledge of the five men despite information that the men were detained there.

Another witness told the inquest that he heard the noise of a van and gunshots near the camp on Saturday night.

In a letter to the top security officials in Vavuniya, district judge M Ilanchelian has urged maximum cooperation with the investigation.

மீண்டும் தொடங்கும் மிடுக்கு

சென்னையிலிருந்து திருவல்லிக்கேணி பதிப்பாளர்களினாலே திரு. நரசிம்மன் ராம் இனை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் இந்து தாளிகையின் விமர்சனத்துக்குட்படாத ஸ்ரீலங்கா அரசின் சார்புச்செய்திகளின் தவறுகளையும் திரிபுகளையும் கடந்த காலத்திலே சுட்டிவந்திருக்கின்றோம். இதுபோலவே, இந்துஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் ஒப் இந்தியா போன்ற இந்தியச்செய்தித்தாட்களின் செய்திகளின் ஓட்டைகளையும் சுட்டியிருக்கிறோம். கடந்த ஓராண்டு காலம் இவ்வூடகங்களின் திட்டமிட்ட செயற்பாடுகளின் விளைவான பிரமாண்டத்தினால், முற்றாக முழுநேரக்கடமையாகச் செய்யமுடியாதென்ற சோர்வினைத் தந்ததால் கைவ்விட்டிருந்தோம். ஆனால், அண்மைக்காலத்திலே இப்படியான திரிபுவாதிகள் இணையத்திலும் விமர்சனமின்றி பிரபல ஊடகவியலாளர்கள் என்ற முகங்களோடும் திரிபான இவ்வூடகச்செய்திகளை மேலும் தமது தேவைக்கேற்ப வெட்டி ஒட்டிச் சேகரிக்கும், பின்னூட்டங்களாக இணணக்கும் நச்சுத்தனமான பதிவர்கள், பின்னூட்டிகளாகவும் உலாவுவதைக் காணக்கூடியதாகவிருக்கின்றது. குறிப்பாக, கடந்த இரு வாரங்களாக தி இந்து இதழின் செய்திகள் முழுமையாக ஸ்ரீலங்கா அரசின் பிரசாரப்பிரிவு ஊதுகுழலாகவே செயற்படுவதையும் "ஸ்ரீலங்கா நிலைமையை சில இந்தியப்பதிப்புகளுக்கப்பால் அறியமாட்டோம்" என்று வெளிப்படையாகச் சொல்லும் பதிவர்களின் சொந்த அரசியற்கத்தரிப்பூ வேலைப்பாடுகளும் எமது தேவையை அழுத்திச் சொல்கின்றன.

இந்நிலையிலே மீண்டும், தமிழிலே ஈழம் தொடர்பான ஊடகத்திரிபுகளைச் சுட்டிக்காட்டும் செயற்பாட்டினைத் தொடங்க, தொடர எண்ணுகிறோம். முழுமையான கண்காணிப்பினைச் செய்யவும் பதியவும் வாய்ப்பின்றிப் போனாலுங்கூட, இயன்றவரை செயற்படுத்த முயற்சிக்கின்றோம்.

இச்செயற்பாட்டிலே ஈடுபாடுள்ள வாசகர்களும் எமக்கான உதவிகளை, தவறு, திரிபென்று கருதப்படும் செய்திகளை, அலசல்களை, ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டுவதனாலே செய்யமுடியும்.

எம்மைக் கீழ்க்கண்ட முகவரியூடாக அணுகமுடியும்.
ramwatcher at gmail dot com

பழைய தமிழில் ராம்வோச் பதிவினை இங்கே அணுகலாம்

நன்றி.