Showing posts with label eelam. Show all posts
Showing posts with label eelam. Show all posts

மீண்டும் தொடங்கும் மிடுக்கு

சென்னையிலிருந்து திருவல்லிக்கேணி பதிப்பாளர்களினாலே திரு. நரசிம்மன் ராம் இனை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் இந்து தாளிகையின் விமர்சனத்துக்குட்படாத ஸ்ரீலங்கா அரசின் சார்புச்செய்திகளின் தவறுகளையும் திரிபுகளையும் கடந்த காலத்திலே சுட்டிவந்திருக்கின்றோம். இதுபோலவே, இந்துஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் ஒப் இந்தியா போன்ற இந்தியச்செய்தித்தாட்களின் செய்திகளின் ஓட்டைகளையும் சுட்டியிருக்கிறோம். கடந்த ஓராண்டு காலம் இவ்வூடகங்களின் திட்டமிட்ட செயற்பாடுகளின் விளைவான பிரமாண்டத்தினால், முற்றாக முழுநேரக்கடமையாகச் செய்யமுடியாதென்ற சோர்வினைத் தந்ததால் கைவ்விட்டிருந்தோம். ஆனால், அண்மைக்காலத்திலே இப்படியான திரிபுவாதிகள் இணையத்திலும் விமர்சனமின்றி பிரபல ஊடகவியலாளர்கள் என்ற முகங்களோடும் திரிபான இவ்வூடகச்செய்திகளை மேலும் தமது தேவைக்கேற்ப வெட்டி ஒட்டிச் சேகரிக்கும், பின்னூட்டங்களாக இணணக்கும் நச்சுத்தனமான பதிவர்கள், பின்னூட்டிகளாகவும் உலாவுவதைக் காணக்கூடியதாகவிருக்கின்றது. குறிப்பாக, கடந்த இரு வாரங்களாக தி இந்து இதழின் செய்திகள் முழுமையாக ஸ்ரீலங்கா அரசின் பிரசாரப்பிரிவு ஊதுகுழலாகவே செயற்படுவதையும் "ஸ்ரீலங்கா நிலைமையை சில இந்தியப்பதிப்புகளுக்கப்பால் அறியமாட்டோம்" என்று வெளிப்படையாகச் சொல்லும் பதிவர்களின் சொந்த அரசியற்கத்தரிப்பூ வேலைப்பாடுகளும் எமது தேவையை அழுத்திச் சொல்கின்றன.

இந்நிலையிலே மீண்டும், தமிழிலே ஈழம் தொடர்பான ஊடகத்திரிபுகளைச் சுட்டிக்காட்டும் செயற்பாட்டினைத் தொடங்க, தொடர எண்ணுகிறோம். முழுமையான கண்காணிப்பினைச் செய்யவும் பதியவும் வாய்ப்பின்றிப் போனாலுங்கூட, இயன்றவரை செயற்படுத்த முயற்சிக்கின்றோம்.

இச்செயற்பாட்டிலே ஈடுபாடுள்ள வாசகர்களும் எமக்கான உதவிகளை, தவறு, திரிபென்று கருதப்படும் செய்திகளை, அலசல்களை, ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டுவதனாலே செய்யமுடியும்.

எம்மைக் கீழ்க்கண்ட முகவரியூடாக அணுகமுடியும்.
ramwatcher at gmail dot com

பழைய தமிழில் ராம்வோச் பதிவினை இங்கே அணுகலாம்

நன்றி.