சொல்லாதன சொல்வோம்

12, நவம்பர் 2007 திங்கள் அன்று சென்னையிலே விடுதலைப்புலிகளின் மறைந்த அரசியற்பிரிவுத்தலைவர் தமிழ்ச்செல்வனின் கொலையைக் கண்டிக்குமுகமாக வைகோ, பழ. நெடுமாறன் ஆகியோர் பேரணி நடத்த முற்பட்டபோது, கைது செய்யப்பட்டனர்.

இதன் பின்னால், சென்னையிலிருந்து வரும் இந்து பத்திரிகை ஒரு செய்தியை வெளியிட்டிருக்கின்றது.

The HinduTop Stories
'No comment' on arrest of Vaiko, Nedumaran: LTTE
[Tuesday, November 13, 2007 : 1805 Hrs]

இச்செய்தியிலே குறிப்பிடப்பட்டிருப்பவை

LTTE on Tuesday refrained from making any comment on the arrest of MDMK chief Vaiko and Tamil Nationalist Movement leader P Nedumaran, who were taken into custody in Tamil Nadu for defying a ban on a rally to condole the death of the Tigers' political head S P Thamilselvan.


என்பதும்

"LTTE does not immediately want to make any comment on the arrest," sources close to the outfit said.


என்பதுமாகும்.

தமிழகத்திலே மட்டுமல்ல, இந்தியா, உலகநாடுகள் எங்கெனினும் தமக்கு ஆதரவாகவோ எதிராகவோ நடத்தப்படும் பேரணிகள் குறித்து விடுதலைப்புலிகள் இதுவரை காலமும் உடன் கருத்து வெளியிட்டதாக, ராம்வோச்சர் தேடியவரையிலும் காணமுடியவில்லை. இந்து பத்திரிகைகூட, அப்படியான சந்தர்ப்பங்களிலே விடுதலைப்புலிகளிடம் கருத்தினைக் கேட்டது பற்றியும் காணமுடியவில்லை.

அந்நிலையிலே, மேற்படியான இந்துவின் செய்தி இந்துவின் பத்திரிகைத்தனத்திலே ஒரு புதிய உத்தியாக, "வைகோ, பழ நெடுமாறன் கைது பற்றி விடுதலைப்புலிகளுக்குக் கருத்தோ, அக்கறையோ இல்லை" என்ற அர்த்தம் வெளிப்படும் வகையிலே வெளியாகியிருக்கின்றது.

தலைப்பிலே "'No comment' on arrest of Vaiko, Nedumaran: LTTE" என்று சொல்லியிருக்கும் இந்து, உள்ளடக்கச்செய்தியின் ஆரம்பத்திலே, "LTTE on Tuesday refrained from making any comment on the arrest of MDMK chief Vaiko and Tamil Nationalist Movement leader P Nedumaran" என்பதாகத் திரித்து, இறுதியிலே ""LTTE does not immediately want to make any comment on the arrest," sources close to the outfit said" என்பதாக மாற்றிவிடுகின்றது. இந்து, புரொண்ட்லைன் வெளியீடுகளைத் தொடர்ந்து வாசித்துவருகின்றவர்களுக்கு, இவை ஸ்ரீலங்கா, ஈழம், ஸ்ரீர்லங்கா அரசு, விடுதலைப்புலிகள் குறித்த (தமது) கருத்துகளை எப்போதும் "sources close to the XXXX" என்பதாகவோ "sources not want to be identified" போன்ற வகையிலோ வெளியிட்டுவருவது தெரிந்திருக்கும். பத்திரிகைத்துறையிலே இப்படியான தமக்குத் தகவல் தருகின்றவர்களின் அடையாளங்களைக் காப்பதற்காக, இப்படியான தொடர்களைப் பத்திரிகையாளர்கள் பயன்படுத்துவது வழக்கமே. ஆனால், ஸ்ரீலங்கா-ஈழம் தொடர்பாக, இந்து குழுமவெளியீடுகளிலே இந்நிலை அவ்வூடகத்தின் இலங்கை அரசியல் குறித்த நிலைப்பாடுகளை வெளியிடும், வாசகர்களுக்கு சில கருத்துகளையும் தோற்றங்களையும் புகுத்தும் உத்தியாகவே பயன்படுகின்றதென்பது மிகவும் வெளிப்படை.

இப்படியாக, இந்து, "வைகோ, நெடுமாறன் கைது குறித்து விடுதலைப்புலிகள் கருத்து ஏதுமில்லை" என்று சொன்னதாகச் சொல்லும் இச்செய்தி, ஸ்ரீலங்கா அரசுசார்பான செய்தியூடகங்களிலோ, ஸ்ரீலங்கா அரசுவலைத்தளங்களிலோ, இன்னமும் செய்திகளை தாம் பெற்றுக்கொண்ட ஊடக ஆதாரமின்றி உருவாக்கும் தினமலர் போன்ற பத்திரிகைநெறியினை முற்றிலுமே கைக்கொள்ளாத தமிழ்ச்செய்தியூடகங்களிலோ இவ்வாரத்திலே மேலும் திரிக்கப்பட்டும் இந்துவின் பத்திரிகைநெறியினை முன்வைத்துப் பதிப்பிக்கப்பட்டும் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏற்கனவே ஸ்ரீலங்கா அரசு வெளியிடும் செய்திகளை இந்து, இந்துஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் ஒப் இந்தியா, இந்தியன் எக்ஸ்ப்ரஸ் போன்றவை செய்திகளாகத் தருவதையும் அச்செய்திகளையே மீண்டும் இப்பத்திரிகைகள் சொல்லும் செய்திகளாக ஸ்ரீலங்கா அரசின் செய்தித்தளங்களும் செய்தித்தாபனங்களும் வெளியிடுவதை நாம் கண்டிருக்கின்றோம். சுட்டியும் காட்டியிருக்கின்றோம். இந்தச்செய்தியும் இப்படியாக செய்திச்சுழற்சிக்கு உட்படுத்தப்படுமா என்பதை நாம் காத்திருந்தே காணவேண்டும்.

7 comments:

Anonymous said...

லங்கா ரத்னா விருதுக்கான விசுவாசத்தை இந்து தனது செய்திகளில் வெளியிடுவது வழமையானது. இதில் என்ன ஆச்சரியம்?

புள்ளிராஜா

Anonymous said...

எல்லோருக்கும் தெரிந்ததை இணையத்திலே திரும்பச் சொல்வதால் என்ன பயன்? நாலு பேர் இந்துவைத் திட்டுவார்கள். அவ்வளவுதான். அத்தோடு கதை முடிந்தது.

இதைப் படி எடுத்து இணையத்தினைப் பயன்படுத்தாத இந்து வாசகர்களுக்குக் கொடுத்தாலாவது பயனிருக்கும். ஒரு படி ஒரு நூலகத்துக்கு என்று சென்னையிலே ஒட்டிவிட்டாலாவது உபயோகமாகும். தொகுத்து ஒரு நூலாகப் போடுங்கள். இல்லாவிட்டால், இணையத்திலே குண்டுச்சட்டியிலே குதிரை ஓட்டிக்கொண்டிருக்கவேண்டியதுதான்.

said...

Really Good job.Keep Continue

said...

//இல்லாவிட்டால், இணையத்திலே குண்டுச்சட்டியிலே குதிரை ஓட்டிக்கொண்டிருக்கவேண்டியதுதான்.//


அது ஒரு காலம் அண்ணாச்சி

இப்போது தமிழ்நாடு மீடியாக்கள் தமிழ் மணத்தை நுகர்கிறார்கள்.

எனவே இந்து பத்திரிகையாகட்டும் திரைப்பட இயக்குனர் பேரரசு,சங்கர் ஆகட்டும்
தமிழ் பதிவர்களிலிருந்து தப்ப முடியாது.

பத்திரிகையாளர்களுக்கு கிம்பளம் கொடுத்து எழுதும் முறைக்கு சாவுமணியடித்து வலைப்பதிவர்கள் சுயாதீனமாக எழுதுவதை தமிழுலகம் கவனிக்கும் காலம் வந்துவிட்டது.

Anonymous said...

மீடியாக்கள் தமிழ்மணத்த நுகர்ந்து என்னங்க பயன்?

விகடன், தினமலம், மங்கையர்மலர் எல்லாமே அவுங்க அவுங்க டேஸ்டுக்கும் ரோஸ்டுக்கும் தகுந்த மாதிரி பதிவுகள எடுத்துப் போட்டுருவாங்க. ஹிண்டுவ கிண்டல் பண்ணினத போட்ருவானுகளா? போங்க சார், மாமாவா, மாமியா இருக்கல்லன்னா ஒரு மனுஷாளும் மலத்துல போட மாட்டா

Anonymous said...

Why do you allow brahmin bashing in the name of anti-Hindu post? Do brahmins have any control on Ram or Hindu?

Anonymous said...

//Why do you allow brahmin bashing in the name of anti-Hindu post? Do brahmins have any control on Ram or Hindu?//

Could you kindly show which Bas(h)es
b(ram)in in this post?

nut case!!
--fd